Dindigul I Leoni mocks TVK party: திண்டுக்கல் ஐ லியோனி, திராவிட முன்னேற்ற கழக மேடையில் நடிகர் விஜய் கட்சியை கலாய்த்து தள்ளினார். மேலும், 2026ல் நீங்க டீ விற்கதான் போறீங்க என்றார்.
Dindigul I Leoni mocks TVK party: திண்டுக்கல் ஐ லியோனி, திராவிட முன்னேற்ற கழக மேடையில் நடிகர் விஜய் கட்சியை கலாய்த்து தள்ளினார். மேலும், 2026ல் நீங்க டீ விற்கதான் போறீங்க என்றார்.
Published on: May 4, 2025 at 1:53 pm
கோயம்புத்தூர், மே 4 2025: கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொள்ளாச்சியில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்தப் போதுக்கூட்டத்தில் திண்டுக்கல் ஐ லியோனி கலந்துகொண்டார்.
அப்போது அவர் த.வெ.க.வை கலாய்த்து தள்ளினார். மேலும், 2026ல் நீங்க டீ விற்கதான் போறீங்க என்றார். தொடர்ந்து பேசிய திண்டுக்கல் ஐ லியோனி, “அதெல்லாம் ஒரு கட்சியா. அவர் மேடையில் டி.வி.கே. டி.வி.கே என்றார். எனக்கு அது காதில், டீ விற்க, டீ விற்க எனக் கேட்டது.
தொடர்ந்து, ஒரு கட்சி தலைவருக்கு முன்னால் வேனில் ஒருவன் குத்தாட்டம் போடுவானா? இதற்கு பெயர் கட்சியா? என்றார். மேலும், கோவை த.வெ.க முகவர் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அங்கிருந்தவர்களை பார்த்து நான் சொன்னதை திரும்ப சொல்ல வேண்டும் என்றார்.
அவரும் டி.வி.கே, டி.வி.கே, டி.வி.கே என்றார். அதுவும் எனக்கு டீ விற்க டீ விற்க எனத்தான் கேட்டது என்றார். இதைக் கேட்டு அங்கிருந்த தி.மு.க.வினர் சப்தமாக சிரித்தனர்.
2026 சட்டமன்ற தேர்தலை தி.மு.க. காங்கிரஸும், அ.தி.மு.க. பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. தமிழக வெற்றிக் கழகமும் வலுவான கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நீட் தேர்வுக்கு அஞ்சி மேலும் ஒரு மாணவி தற்கொலை.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com