Edappadi Palaniswami: உதயநிதியை துணை முதலமைச்சராக ஆக்கியதுதான் தி.மு.க.வின் சாதனை எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Edappadi Palaniswami: உதயநிதியை துணை முதலமைச்சராக ஆக்கியதுதான் தி.மு.க.வின் சாதனை எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Published on: May 3, 2025 at 9:26 pm
சென்னை, மே 3 2025: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதியை ஆக்கியதுதான் தி.மு.க.வின் சாதனை எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர்ருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுகவின் சாதனை என்பது உதயநிதியை துணை முதலமைச்சர் ஆகியதுதான் என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ” எதற்கெடுத்தாலும் திமுகவினர் சாதனை சாதனை என்கிறார்கள். உங்களின் சாதனை துணை முதல்வராக உதயநிதியை ஆக்கியதுதான். திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ன? என்றார்.
2026 சட்டமன்ற தேர்தல்..
தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ” 2026 சட்டமன்றத் தேர்தல் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் என அனைத்துக்கும் முடிவு கட்டும் தேர்தலாக இருக்கும். இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் காத்திருக்கின்றனர்” என்றார்.
அதிமுக பாஜக மகிழ்ச்சி கூட்டணி
தொடர்ந்து அதிமுக பாரதிய ஜனதா கட்சி இடையேயான கூட்டணி மகிழ்ச்சியோடு அமைக்கப்பட்ட கூட்டணி என தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, ” எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் பயமில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வருமான வரி அமலாக்க துறையை பார்த்து திமுகவுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் கொள்ளை அடித்ததால் இவர்கள் அமலாக்க துறை மற்றும் வரி துறையை பார்த்து பயம் கொள்கிறார்கள்; ஊழல் செய்த பணத்தை என்ன செய்வது என அறியாமல் திமுகவினர் திணருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க காவல்துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்; அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com