Pahalgam Terrorist Attack : சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தியுள்ளனர். இந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Pahalgam Terrorist Attack : சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தியுள்ளனர். இந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Published on: May 3, 2025 at 8:38 pm
கொழும்பு, மே 3 2025: சென்னையில் இருந்து கொழும்பு (இலங்கை) சென்ற இலங்கை விமானம் “விரிவான பாதுகாப்பு சோதனைக்கு” உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் செய்திக்குறிப்பின் வாயிலாக சனிக்கிழமை (மே 3 2025) உறுதிப்படுத்தியது.
அந்த அறிக்கையில், யூ.எல் (UL) 122 என்ற விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 11:59 மணிக்கு (உள்ளூர் நேரம்) சென்னையிலிருந்து கொழும்பு வந்ததாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் விமானத்தில் இருக்கலாம் என்ற ரகசியத் தகவலை அடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து வந்த விமானத்தை போலீசார் சோதனை செய்ததாக இலங்கை காவல்துறையை மேற்கோள் காட்டி பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணை மற்றும் சந்தேக நபர்களைப் பிடிக்க பெரிய அளவிலான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் – யூ.எல் 122 – ஞாயிற்றுக்கிழமை காலை 11:59 மணிக்கு (உள்ளூர் நேரம்) சென்னையிலிருந்து கொழும்புக்கு சென்றுள்ளது.
பஹல்காம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2025 ஏப்.22ஆம் தேதி 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ஆம் ஆத்மி பிரமுகர் மகள் கனடாவில் மரணம்; கடற்கரையில் பிணமாக கிடந்தார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com