Gauhati High Court Bar Association: அஸ்ஸாம் கௌஹாத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து மாநில முதலமைச்சர் ஹிமானந்த பிஸ்வாஸ சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Gauhati High Court Bar Association: அஸ்ஸாம் கௌஹாத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து மாநில முதலமைச்சர் ஹிமானந்த பிஸ்வாஸ சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Published on: May 2, 2025 at 5:23 pm
கௌகாத்தி, மே2 2025: அஸ்ஸாம் கௌஹாத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து மாநில முதலமைச்சர் ஹிமானந்த பிஸ்வாஸ சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உயர்நீதிமன்ற வளாகத்தை அதன் தற்போதைய இடத்திலிருந்து வடக்கு குவஹாத்தியின் ரங்மஹாலில் உள்ள நீதித்துறை நகரத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை எதிர்க்கும் வழக்கறிஞர் சங்கத்தின் முடிவை எதிர்த்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக ஹிமாந்த பிஸ்வாச சர்மா வழக்கறிஞர் சங்கத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “1994 முதல் 2001 வரை சட்டப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டதாகவும், வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எந்தவொரு நலன் மோதலையும் தவிர்ப்பதற்காக மட்டுமல்லாமல், நீதித்துறை சீர்திருத்தம், நிறுவன வளர்ச்சி மற்றும் சட்ட அமைப்பின் எதிர்காலம் ஆகியவற்றின் பரந்த நலனுக்காகவும் தான் உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மாநில அட்வகேட் ஜெனரல் (ஏஜி) தேவஜித் சைகியாவும் வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்திருந்தார். உயர் நீதிமன்றத்தை மாற்றும் நடவடிக்கையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இது உயர் நீதிமன்றத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் நீதிபதிகள் கூட்டத்திற்கும் இடையே மோதலுக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.63 ஆயிரம் கோடி.. ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியா ஃபிரான்ஸ் கையெழுத்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com