Canada: 4 நாட்களுக்கு முன்பு மாயமான ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் மகள் கனடா கடற்கரை அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Canada: 4 நாட்களுக்கு முன்பு மாயமான ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் மகள் கனடா கடற்கரை அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: April 29, 2025 at 1:32 pm
ஓட்டாவா, ஏப்.29 2025: பஞ்சாப் மாநிலம் டெரா பாசியைச் (Dera Bassi) சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவரின் 21 வயது மகள் வான்ஷிகா சைனி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கனடா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டார்.
ஆம் ஆத்மி பிரமுகர் டேவிந்தர் சைனியின் மகள் வான்ஷிகா சைனியின் உடல் ஒட்டாவாவில் உள்ள கடற்கரைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. இவர், ஏப்ரல் 22 முதல் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து மாயமானார்.
இத குறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவர், “அவர் காவல்துறையை அணுகினார்.அதைத் தொடர்ந்து ஒட்டாவாவில் உள்ள தூதரகத்தை ஆன்லைனில் தொடர்பு கொள்ளவும், காணாமல் போனது குறித்து புகாரளிக்கவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது” என்றார். இதற்கிடையில், குடும்பத்தினர் உடலை இங்கு கொண்டு வர உதவுமாறு கட்சி எம்.பி.க்கள் ராஜ் குமார் சப்பேவால், பல்பீர் சிங் சீசெவால் மற்றும் பிற மூத்த தலைவர்களிடம் தெரிவித்ததாக எம்.எல்.ஏ மேலும் கூறினார்.
இந்த நிலையில், தேரா பாசியில் தனது சீனியர் செகண்டரி படிப்பை முடித்த பிறகு, ஏப்ரல் 18 அன்று கனடாவில் சுகாதாரப் படிப்பில் இரண்டு வருட பட்டம் பெற்ற வான்ஷிகா, ஏதோ ஒரு கால் சென்டரில் பணிபுரிந்தார், பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பெற்றார். அவர் வேலைக்குச் சென்றார், ஆனால் திரும்பவில்லை என அவரது தோழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கனடாவில் இந்திய மாணவி மீது துப்பாக்கிச் சூடு.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com