Nippon India Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தற்போது மிக பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. எனினும், இந்தப் ஃபண்ட்கள் சான்றளிக்கப்பட்ட வருமானத்தை தராது என்பதையும் முதலீட்டாளர்கள் மனதில் கொள்ளல் வேண்டும்.
Nippon India Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தற்போது மிக பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. எனினும், இந்தப் ஃபண்ட்கள் சான்றளிக்கப்பட்ட வருமானத்தை தராது என்பதையும் முதலீட்டாளர்கள் மனதில் கொள்ளல் வேண்டும்.
Published on: April 28, 2025 at 8:24 pm
Updated on: April 28, 2025 at 8:32 pm
சென்னை, ஏப்.28 2025: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கடந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் வருமானத்தை கொடுத்துள்ளள. எனினும் சில ஃபண்ட்கள் சரிவையும் சந்தித்துள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பொறுத்தவரை சான்றளிக்கப்பட்ட வருமான வாய்ப்புகள் என்று எதுவும் இல்லை.
இதனை ஒவ்வொரு முதலீட்டாளர்களும் மனதில் கொள்ளல் வேண்டும். மேலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இந்த நிவையில், கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து பார்க்கலாம்.
இந்தத் திட்டம் கடந்த 5 ஆண்டுகளில் 17.43 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. அந்த வகையில், திட்டத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14.26 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இந்தத் திட்டம் குறுகிய காலத்திலும் குறிப்பிடத்தக்க வருமானத்தை அளித்துள்ளது. ஒரு முதலீட்டாளர் அதே தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால், முதலீடு ₹3,40,000 இலிருந்து ₹4,55,279 ஆக வளர்ந்திருக்கும்.
மேலும், 10 ஆண்டு முதலீட்டை பொறுத்தவரையில், ₹13,00,000 காலப்போக்கில் ₹34,94,567 ஆக உயர்ந்துள்ளது. நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்ஸ் (முன்னர் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்) இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும். இது நிர்வகிக்கப்பட்ட கணக்குகள், பரஸ்பர நிதிகள், ஓய்வூதிய நிதிகள், மாற்று முதலீடுகள் மற்றும் ஆஃப்ஷோர் நிதிகள் முழுவதும் சொத்துக்களை நிர்வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எஸ்.பி.ஐ டூ ஐ.சி.ஐ.சி.ஐ வரை.. ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com