summer rains in 2025: இந்த ஆண்டு (2025) கோடை காலத்தில் பெங்களூருவில் அதிக மழை பொழிய வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
summer rains in 2025: இந்த ஆண்டு (2025) கோடை காலத்தில் பெங்களூருவில் அதிக மழை பொழிய வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
Published on: April 27, 2025 at 9:51 am
பெங்களூரு, ஏப்.27 2025: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்த ஆண்டு முந்தைய ஆண்டுகளை விட அதிக கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய வானிலை அதிகாரிகள், “ஈரப்பதமான காற்றின் உயர்வு மற்றும் அதன் பின்னர் ஏற்படும் குளிர்ச்சியால் ஏற்படும் வெப்பச்சலன மழையின் அதிகரிப்பே இந்த மாற்றத்திற்குக் காரணம்” என்றனர்.
கடந்த ஆண்டு பெங்களூருவில் வெப்பமான மற்றும் நீடித்த வறட்சி நிலவியது. இந்த ஆண்டு அதுபோலல்லாமல், மாநிலத்தில் பருவமழைக்கு முந்தைய மழை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது.
இந்த நிலையில், பெங்களூரு வானிலை மையத்தின் தலைவர் என். புவியரசன், “இந்த நிகழ்வின் காரணமாக, இந்த ஆண்டு பெங்களூருவில் கோடை மழை அதிகமாக பெய்யும்” என்றார்.
மேலும், செவ்வாய்க்கிழமை (ஏப்.29 2025) முதல் வெள்ளிக்கிழமை (மே2 2025) வரை பெங்களூரு முழுவதும் பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும்” என்றார். இதற்கிடையில், அடுத்த இரண்டு நாட்களில் பகல்நேர வெப்பநிலை 34°C முதல் 23°C வரை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : 15வது வேலை வாய்ப்பு மேளா; 51 ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதம் வழங்கிய பிரதமர் மோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com