Uddhav Thackeray replys to Modi | மராட்டியத்தில் மாமன்னர் சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில், “இந்தத் தவறுக்கு மன்னிப்பு இல்லை” என உத்தவ் தாக்கரே கூறினார்.
Uddhav Thackeray replys to Modi | மராட்டியத்தில் மாமன்னர் சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில், “இந்தத் தவறுக்கு மன்னிப்பு இல்லை” என உத்தவ் தாக்கரே கூறினார்.
Published on: September 1, 2024 at 2:11 pm
Uddhav Thackeray replys to Modi | மராட்டிய மாமன்னர் சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில், மகாராஷ்டிராவில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா கேட் நோக்கி பேரணி நடத்தின.
இந்தப் பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, “”இந்த தவறுக்கு மன்னிப்பு இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் மோடி ஆணவத்துடன் மன்னிப்பு கேட்டார்” என்றார்.
மேலும், “நீங்கள் (பிரதமர் மோடி) எத்தனை முறை மன்னிப்பு கேட்கப் போகிறீர்கள்? என்றார். இதையடுத்து, மகாராஜ் சிலை சரிவு, அயோத்தி ராமர் கோவிலில் கசிவு, டெல்லி விமான நிலையம், நாடாளுமன்றத்தில் பிரச்சினைகள் என எதெற்கெல்லாம் மன்னிப்பு கேட்கப் போகிறீர்கள்? என்றார்.
கடந்த ஆண்டு கடற்படை தினத்தன்று (டிசம்பர் 4) மால்வான் தெஹ்சில் ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட மராட்டிய பேரரசு நிறுவனரின் 35 அடி சிலை, ஆகஸ்ட் 26, 2024 அன்று மதியம் 1 மணியளவில் இடிந்து விழுந்தது.
இந்த நிலையில் ஆக.30ஆம் தேதி மகாராஷ்டிரா சென்ற மோடி சிலை இடிந்து விழுந்த விவகாரத்துக்காக மன்னிப்பு கோரினார்.
இதையும் படிங்க ‘பாதம் பணிகிறேன், என் தெய்வத்திடம் மன்னிப்பு கோருகிறேன்’: பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com