Gujarat | குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து 24 முதலைகள் மீட்கப்பட்டன
Gujarat | குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து 24 முதலைகள் மீட்கப்பட்டன
Published on: September 1, 2024 at 1:19 pm
Gujarat | குஜராத்தின் வதோதராவில் ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி வரை பெய்த கனமழையின் காரணமாக விஸ்வாமித்ரி ஆற்றில் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்தது.
இது குறித்த பேசிய அதிகாரி ஒருவர், “குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து 24 முதலைகள் மீட்கப்பட்டன” எனவும் தெரிவித்தார்.
மேலும், “இந்த ஆற்றில் 440 முதலைகள் வசிக்கின்றன, அவற்றில் பல அஜ்வா அணையில் இருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் வெள்ளத்தின் போது குடியிருப்பு பகுதிகளுக்கு நகர்கின்றன” என்றார்.
தொடர்ந்து இந்தப் பகுதியில் இதுவரை மனிதனை முதலை தாக்கியது என்பது போன்ற எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை” என்றார்.
இதையடுத்து, “விஸ்வாமித்ரி ஆற்றின் நீர்மட்டம் வரும் வாரங்களில் வெகுவாக குறையும் என்பதால், மீட்கப்பட்ட முதலைகள் மற்றும் பிற ஊர்வன அதில் விடப்படும்” என்றார்.
மேலும், “2 அடி நீள முதலை முதல் 14 அடி நீள முதலை வரை மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க தயாரா இருங்க.. இந்தியாவில் மீண்டும் கோவிட் அலையா? எச்சரிக்கும் சுகாதார நிபுணர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com