Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என அழைத்துக் கொள்ள தகுதியற்றவர்கள் என அஜ்மீர் தர்கா தலைவர் கூறினார்.
Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என அழைத்துக் கொள்ள தகுதியற்றவர்கள் என அஜ்மீர் தர்கா தலைவர் கூறினார்.
Published on: April 23, 2025 at 7:37 pm
புதுடெல்லி, ஏப்.23 2025: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தங்களை இஸ்லாமியர் என சொல்ல தகுதியற்றவர்கள் என அஜ்மீர் தர்கா தலைவர் கூறினார்.
இது குறித்து, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அஜ்மீர் தர்கா ஆன்மிக குரு சையத் ஜைனுல் அபேதீன் அலி கான், “மதத்தைக் கேட்டு குண்டுகளை வீச எந்த மதமும் யாரையும் தகுதிப்படுத்தவில்லை” என்றார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், “இது மிகவும் வேதனையான சம்பவம். இதுபோன்ற சம்பவங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை.
#WATCH | Ajmer, Rajasthan | #PahalgamTerrorAttack | The Spiritual Head of the dargah, Syed Zainul Abedin Ali Khan says, "This is a very painful incident and there is no place for such incident in Islam…Why are innocent people being killed? From the Islamic point of view, they… pic.twitter.com/jhKnB5tUMM
— ANI (@ANI) April 23, 2025
அப்பாவி மக்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்? இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், அவர்கள் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர்கள். யாரையாவது அவர்களின் மதத்தைக் கேட்டு அவர்கள் மீது குண்டுகளை வீச எந்த மதமும் உங்களைத் தகுதிப்படுத்தவில்லை” என்றார்.
மேலும், “நீங்கள் ஏன் இஸ்லாத்தை அவமதிக்கிறீர்கள்? இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்றார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒற்றுமை நடவடிக்கை: ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com