America: 2025 மே மாதம் பட்டம் பெற இருந்த நிலையில், அமெரிக்காவில் ஆந்திர மாணவி விபத்தில் உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
America: 2025 மே மாதம் பட்டம் பெற இருந்த நிலையில், அமெரிக்காவில் ஆந்திர மாணவி விபத்தில் உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on: April 18, 2025 at 10:56 pm
நியூயார்க், ஏப்.18 2025: ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த இளம் பெண் தீப்தி, அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் படித்துக் கொண்டிருந்தார். இவர், பட்டப்படிப்பு முடிவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, டெக்சாஸில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். ஆந்திர மாணவி தீப்தியின் உயிரைப் பறித்த இந்த விபத்து டெக்சாஸ் டென்டனில் நடந்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
24 வயதான தீப்தி, ஏப்ரல் 12 ஆம் தேதி அல் லாகோ டிரைவின் 2300 பிளாக் அருகே தனது நண்பருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். வேகமாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
இந்த நிலையில், அந்த வாகனம் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த விபத்தில், தீப்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஏப்.15ஆம் தேதி தீப்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தீப்தி வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வந்தார். இவர், மே மாதம் பட்டம் பெறவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்: வரி விதிப்பில் மாற்றம் வருமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com