மாலத்தீவில் ரோஹித் சர்மா; மகளுடன் விடுமுறை கொண்டாட்டம்
Rohit Sharma Maldives Tour: இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது குடும்பத்தினருடன் மாலதீவுற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் ரோகித் சர்மா தனது மகன் சமைராவுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு இரண்டாவதாக சமீபத்தில் ஐசிசி பட்டத்தை வென்றுள்ளார் ரோஹித் சர்மா. இதன் மூலம் ரோகித் சர்மா இரண்டாவது வெற்றிகரமான இந்திய கேப்டன் ஆகியுள்ளார். நான்கு முக்கிய ஐசிசி போட்டிகளிலும் தனது அணியை இறுதி போட்டியில் வழி நடத்திய முதல் சர்வதேச கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ரோஹித் சர்மா கிரிக்கெட்டில் இருந்து சற்று ஓய்வு எடுத்து தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
2007 டி20 உலக கோப்பை 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி பட்டங்களை வென்ற இந்திய அணியின் முதல் வெற்றிகரமான கேப்டன் என்ற பெயரை எம் எஸ் தோனி பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஒரு வருடத்திற்கும் குறைவான நேரத்தில் இரண்டு ஐசிசி பட்டங்களை பெற்ற கேப்டன் என்ற வரிசையில் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களான சௌரவ் கங்குலி மற்றும் கபில்தேவ் ஆகியோரையும் முந்தியுள்ளார்.
T20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் பரவின. ஆனால் இறுதிப் போட்டிக்கு பிறகு அதை ரோஹித் நிராகரித்தார்.
இந்நிலையில் 2025 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா விளையாட உள்ளார் .மும்பை அணியின் முதல் ஐபிஎல் ஆட்டம் மார்ச் 23 அன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.