Pagarkai Name Meaning in Tamil: பாகற்காய் பெயர் வந்தது எப்படி தெரியுமா? இந்த காரணப் பெயருக்கு பின்னால் மிகப்பெரிய சம்பவம் செய்த தமிழர்கள்!
Pagarkai Name Meaning in Tamil: பாகற்காய் பெயர் வந்தது எப்படி தெரியுமா? இந்த காரணப் பெயருக்கு பின்னால் மிகப்பெரிய சம்பவம் செய்த தமிழர்கள்!
Published on: March 11, 2025 at 11:10 am
சித்த மருத்துவத்தில் மிக அற்புதமான தன்மை கொண்ட ஒரு உணவுப் பொருளாக பாகற்காய் அறியப்படுகிறது. இந்தப் பாகற்காயை ஆங்கிலத்தில் கசப்பு காய் என பொருள்படும்படி, (பிட்டர் கார்டு) என அழைப்பார்கள். இந்தக் காய்க்கு பாகற்காய் என பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதற்கு முன்னால் பாகற்காயில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
பாகற்காய் மருத்துவ குணங்கள்
பொதுவாக பாகற்காயில் பல்வேறு நன்மைகள் ஒளிந்துள்ளன. இன்றைய காலகட்டத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை நோய்க்கு இந்த பாகற்காய் அருமருந்தாக உள்ளது.
மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இந்த பாகற்காய் புற்றுநோயை எதிர்த்துப் போராடவும்; கல்லீரலுக்கு பலம் கொடுக்கும் ஒரு உணவு பொருளாகவும் உள்ளது.
மேலும் மற்ற உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும்போது பாகற்காயில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்ப காணப்படுகின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருமளவு அதிகரிக்கிறது. மேலும் தோல் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் பாகற்காய் சிறந்த தீர்வாக அமைகிறது.
இது மட்டுமா பாகற்காய் சிறந்த கிருமி நாசினியாகவும் காமாலை நோய்க்கு மருந்தாகவும் சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. பெண்கள் தாய்மை அடைந்த பின்பு சந்திக்கும் முக்கிய பிரச்சனையான பால் சுரப்பு குறைதலை கட்டுப்படுத்தும் ஓர் மருந்தாகவும் பாகற்காய் உள்ளது.
மேலும் சித்த மருத்துவத்தில் கூறப்படும் பித்தம் மற்றும் கபம் போன்ற பிரச்சனைகளையும் இந்த பாகற்காய் நீக்குகிறது. அதாவது பாகற்காய் உணவு, குளிர்ச்சி மிகுந்ததாக உள்ளது. பாகற்காயை நீங்கள் சரி விகிதத்தில் எடுத்துக் கொண்டால் உங்களுக்கு பசி தூண்டப்படும். அதே நேரம் பித்தம் தணிந்து ரத்தத்தில் இரும்பு சத்து ஏறும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பாகற்காய்க்கு ஆங்கிலேயர்கள் கசப்பு காய் என பெயரிட்ட நிலையிலும் தமிழர்கள் அதற்கு பாகற்காய் என பெயரிட்டனர்.
இந்த பாகற்காய் என்பதற்கு என்ன பொருள் தெரியுமா? பாகு என்றால் இனிப்பு என பொருள். அந்த வகையில் பாகு அல்லாத காய் பாகற்காய். அதாவது அந்தக் காய்க்கு கசப்பு காய் என பெயரிடாமல் பாகு அல்லாத அதாவது இனிப்பு அல்லாத காய் என தமிழர்கள் பெயர் சூட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ஷார்ப்பான கண்களுக்கு ஓர் சவால்.. யானை இங்கே? குதிரை எங்கே?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com