Director Sundar C visits Palani Murugan Temple: பிரபல இயக்குனர் சுந்தர் சி, பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார். அப்போது அவரது மனைவி நடிகை குஷ்பூ உடனிருந்தார்.
Director Sundar C visits Palani Murugan Temple: பிரபல இயக்குனர் சுந்தர் சி, பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார். அப்போது அவரது மனைவி நடிகை குஷ்பூ உடனிருந்தார்.
Published on: March 9, 2025 at 2:29 pm
Updated on: March 9, 2025 at 2:37 pm
பழனி முருகன் கோவிலில் நடிகரும் பிரபல இயக்குனருமான சுந்தர் சி குடும்பத்தினருடன் இன்று ( மார்ச் 9, 2025) காலை வழிபாடு நடத்தினார். பழனி தண்டாயுதபாணியை தரிசனம் செய்வதற்கு முன்பாக மலை அடிவாரத்தில் மொட்டை அடித்து நிறுத்தி கடன் செலுத்தினார் சுந்தர் சி.
இதைத்தொடர்ந்து சுந்தர் சி, தனது குடும்பத்தினருடன் மின் இழுவை ரயில் மூலமாக மலை கோவிலுக்கு சென்றார். அங்கு விழா பூஜைகளில் கலந்து கொண்ட சுந்தர் சி சன்னியாசி கோலத்தில் இருந்த தண்டாயுதபாணி முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
இந்த தரிசனத்திற்கு பின்னர் சுந்தர் சிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் தனது 25 வது திருமண நாளை ஒட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையும் சுந்தர் சி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பழனி தண்டாயுதபாணியை தரிசனம் செய்த சுந்தர் சி மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர், ஆனந்த விநாயகர் சன்னதி மற்றும் போகர் ஜீவசமாதி உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார்.
அப்போது சுந்தர் சி யின் மனைவியும் நடிகையுமான குஷ்பு உடன் இருந்தார். இந்த நிலையில், முருகன் கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு, சுந்தர் சி காரில் புறப்பட்டு சென்றார். பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து சுந்தர் சி நேர்த்தி கடன் செலுத்தியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க குடும்பத்தோடு விரதம் இருந்தார் நயன்தாரா.. தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com