SBI Fixed Deposit for 5 years: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ரூபாய் 10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?
SBI Fixed Deposit for 5 years: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ரூபாய் 10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?
Published on: March 6, 2025 at 7:00 am
Updated on: March 6, 2025 at 1:08 am
இந்திய பொதுத்துறை வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முன்னணி வகிக்கிறது. இந்த வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மட்டுமின்றி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும், பெருமளவு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திட்டத்தில், ஐந்து ஆண்டுகால முதலீட்டுக்கு என்ன ரிட்டன்? பலன்கள் என்னென்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை பொறுத்தவரை, 5 ஆண்டுகால பிக்சட் டெபாசிட் திட்டங்களில் பொதுக் குடிமக்களுக்கு 6.50% வட்டி விகிதமும்; மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது.
₹10 லட்சம் முதலீடு எவ்வளவு ரிட்டன்?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரூபாய் 10 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால், வட்டியாக மட்டும் ரூபாய் மூன்று லட்சத்து 83 ஆயிரத்து 420 கிடைக்கும். அந்த வகையில் முதலீட்டாளருக்கு ரூபாய் 13 லட்சத்து 80 ஆயிரத்து 420 ரிட்டனாக கிடைக்கும். இதுவே சீனியர் சிட்டிசன் என்றால் ரூ.14 லட்சத்து 49 ஆயிரத்து 948 கிடைக்கும்.
மற்ற வங்கிகளில் எப்படி?
ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை பொருத்தமட்டில் வங்கிகளுக்கு வங்கி மற்றும் கால அளவுகளுக்கு ஏற்ப வட்டி விகிதங்களில் வேறுபாடுகள் இருக்கும். இதை சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
மேலும், வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டம் என்பது ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவை கொண்டது ஆகும். இதில் பெரும்பாலான வங்கிகள் 5 ஆண்டு கால பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வரி விலக்கு நன்மைகள் அளிக்கின்றன. இந்த நிலையில் மூத்த குடிமக்கள் இதுபோன்ற வரி விலக்கு சலுகைகள் உள்ளனவா? என்பதை அறிந்து கொள்ளலாம்.
ரெப்போ வட்டி விகிதங்கள்
2025 பிப்ரவரி மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கூட்டம் நடைபெற்றது. இந்த பணவியல் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதங்கள், 0.25 சதவீதம் வரை குறைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து பல்வேறு வங்கிகள், தங்களின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. எனினும் இதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் பொதுத்துறை வங்கிகளில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க மாதம் ரூ.1500 முதலீடு; ரூ.13 லட்சம் வரை ரிட்டன்: மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com