NITI Internship Scheme: நிதி நிதி ஆயோக் இன்டென்ஷிப் திட்டத்துக்கு மாணவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
NITI Internship Scheme: நிதி நிதி ஆயோக் இன்டென்ஷிப் திட்டத்துக்கு மாணவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
Published on: February 25, 2025 at 11:58 pm
Updated on: February 26, 2025 at 1:24 am
நிதி ஆயோக் (National Institution for Transforming India) இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குகிறது. இது, நிதி ஆயோக்கின் பல்வேறு பிரிவுகளுடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.
நிதி ஆயோக் பயிற்சித் திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 10 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான niti.gov.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
இளங்கலை மாணவர்கள்
12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 85% அல்லது அதற்கு சமமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலைப் பட்டத்தின் இரண்டாம் ஆண்டு அல்லது நான்காவது செமஸ்டரின் பருவ இறுதித் தேர்வுகளை முடித்திருக்க வேண்டும்.
முதுகலை மாணவர்கள்
முதுகலை படிப்பின் முதலாம் ஆண்டு அல்லது இரண்டாம் செமஸ்டரின் பருவ இறுதித் தேர்வுகளை முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 70% அல்லது அதற்கு சமமான மதிப்பெண்களுடன் ஆராய்ச்சி/பிஎச்டி படித்திருக்க வேண்டும்.
இதற்கிடையில், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் போது எதிர்கொள்ளும் எந்தவொரு தொழில்நுட்ப சிக்கல்களுக்கும் நிதி ஆயோக் பொறுப்பல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைனில் சமர்ப்பித்த பிறகு எந்த அச்சுப்பிரதிகளோ அல்லது துணை ஆவணங்களோ அனுப்ப வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கணக்கு பாடத்தில் தடுமாறுவேன்.. பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்த தீபிகா படுகோன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com