Post Office PPF Calculator: பி.பி.எஃப் ஸ்கீமில் ரூ.1,000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.
Post Office PPF Calculator: பி.பி.எஃப் ஸ்கீமில் ரூ.1,000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.
Published on: February 25, 2025 at 7:14 pm
பி.பி.எஃப் முதலீடு: இன்றைய காலகட்டத்தில் பி.பி.எஃப் திட்டத்தில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். இந்தத் திட்டம் இடர்பாடு இல்லாத திட்டமாக பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் தற்போது 7.1 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
அந்த வகையில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.500 முதல் முதலீட்டை தொடங்கலாம்.
இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்துக் கொள்ளலாம். அந்த வகையில் 15 ஆண்டுகள் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் ரூ.40 லட்சம் முதலீட்டை திரட்டி இருப்பீர்கள்.
இதுவே 25 ஆண்டுகளில் ரூ.1 கோடியாக உயர்ந்திருக்கும். மேலும், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தத் திட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பி.பி.எஃப் திட்டத்தில் ரூ.1,000 வீதம் மாத முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என பார்க்கலாம்.
ரூ.1,000 மாதாந்திர முதலீடு
பி.பி.எஃப் திட்டத்தில் மாதம் ரூ.1,000 வீதம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் முதலீடு செய்திருப்பீர்கள். அந்த வகையில், 15 ஆண்டுகளில் ரூ.1,80,000 லட்சம் மொத்த முதலீடு செய்திருப்பீர்கள்.
இதற்கு ரூ.1,45,457 வட்டியாக கிடைக்கும். அந்த வகையில் உங்களுக்கான முதிர்ச்சி தொகை ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்து 457 ஆக இருக்கும்.
ரூ.5 ஆயிரம் மாதாந்திர முதலீடு
இதுவே மாதம் ரூ.5 ஆயிரம் முதலீடு என்றால் 15 ஆண்டுகளில் முதிர்ச்சி தொகை ரூ.16 லட்சத்து 27 ஆயிரத்து 284 ஆக கிடைக்கும். இதில் முதலீட்டு தொகை ரூ.9 லட்சம் ஆகவும், எதிர்பார்க்கப்படும் வட்டி ரூ.7 லட்சத்து 27 ஆயிரத்து 284 ஆகவும் காணப்படும்.
இதையும் படிங்க : ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. ஈசி போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com