Arvind Kejriwal meets Punjab CM ஆம் ஆத்மி கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் எம்எல்ஏக்களை டெல்லியில் கெஜ்ரிவால் சந்தித்தார்.
Arvind Kejriwal meets Punjab CM ஆம் ஆத்மி கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் எம்எல்ஏக்களை டெல்லியில் கெஜ்ரிவால் சந்தித்தார்.
Published on: February 11, 2025 at 1:35 pm
அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு: ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவில் அதிருப்தி நிலவுவதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் உள்ள கபூர்தலா இல்லத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சந்திப்பை நடத்துகிறார்.
சமீபத்திய டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்திறனை மறுபரிசீலனை செய்வது குறித்து இதில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், 2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டமிடல் குறித்து விவாதங்கள் கவனம் செலுத்துவதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பஞ்சாப் எம்.பி.க்கள் ராகவ் சாதா மற்றும் சந்தீப் பதக் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பஞ்சாபின் சங்ரூர் எம்.எல்.ஏ நரிந்தர் கவுர், உள்கட்சி அதிருப்தி குறித்த செய்திகளை நிராகரித்தார்.
இது குறித்து பேசிய அவர், “டெல்லியில் மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். இதுபோன்ற சந்திப்புகள் பஞ்சாப் மற்றும் டெல்லி இரண்டிலும் இதற்கு முன்பு நடந்துள்ளன” என்றார்.
இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியில் அதிருப்தி நிலவுவதாகக் கூறியதற்காக காங்கிரஸையும் கவுர் விமர்சித்தார்.
அப்போது, இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த தங்கள் கட்சிக்கு டெல்லியில் ஏன் பூஜ்ஜிய இடங்கள் கிடைத்தன என்பதை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும் என்றார்.
டெல்லியில் பத்தாண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி, பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது
மொத்தமுள்ள 70 இடங்களில் 22 இடங்களை மட்டுமே வென்றது. பாஜகவின் வெற்றி தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லி கவர்னரை சந்தித்த பா.ஜ.க எம்.எல்.ஏ.. இவர்தான் அடுத்த CM ஆ?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com