கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுமதி இன்றி முகாம் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் என்சிசி வகுப்பு எனக் கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த விவகாரத்தில் இதுவரை பள்ளி தாளாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், “தனியார் பள்ளிகளில் முகாம் நடத்தினால் பெற்றோரின் அனுமதி உடன், மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதியும் பெற வேண்டும். அனுமதி பெறாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)