திருக்கார்த்திகை தீபம் ஏற்ற உகந்த நேரம் என்பதை தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் விளக்கேற்றினால் மங்களம் உண்டாகும்.
திருக்கார்த்திகை தீபம் ஏற்ற உகந்த நேரம் என்பதை தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் விளக்கேற்றினால் மங்களம் உண்டாகும்.
Published on: November 25, 2024 at 9:23 am
Updated on: November 25, 2024 at 9:26 am
Karthika Deepam 2024 | கார்த்திகை தீபத் திருநாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நமது கலாச்சாரத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளில் ஒவ்வொருவரும் மாலை நேரம் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுவர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்வு வருடம் தோறும் நடைபெறும்.
இந்த மகா தீபத்தை கிரிவலம் வந்து காண்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.அருணாச்சல மலை மீது ஏற்றப்படும் மகா தீப ஒளியை நேரில் காண்பது பாக்கியமாக நம்பப்படுகிறது. திருக்கார்த்திகை நாளன்று திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பின்னரே அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நாளை தீபத்திருநாள் என்று அழைப்பார்கள்.
அன்று மக்கள் அனைவரும் வீடுகளிலும் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். அந்த நன்னாள் 2024 டிசம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கிறது. விளக்கேற்றக்கூடிய நல்ல நேரமாக கருதப்படுவது கார்த்திகை நட்சத்திரம் தொடங்கும் நேரம் அதாவது டிசம்பர் 13 அன்று காலை 7:50 மணிக்கு தொடங்கி கார்த்திகை நட்சத்திரம் முடிவடைவது டிசம்பர் 14 மாலை 5:48 மணி அளவில் முடிவடைகிறது.
இதையும் படிங்க : முக்திக்கு வழி சொல்லும் சபரிமலை ; 18 படிகள் உணர்ந்தும் தத்துவம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com