வாஷிங்டன், பிப்.2, 2026: உலக சுகாதார அமைப்பின் தலைவர், நிபா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய பாதிப்புகள் இந்தியாவிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மற்ற எந்த நாட்டிலும் இதுவரை பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசஸ் சனிக்கிழமை (ஜன.31, 2026) கூறுகையில், ““நிபா வைரஸ் சம்பவங்கள் அரிதானவை, ஆனால் மிகவும் தீவிரமானவை” என்று எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, “இந்தியாவில் மேற்குவங்கத்தில் பதிவான இரண்டு நிப்பா வைரஸ் தொற்று சம்பவங்கள், 1998-இல் வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து இந்த மாநிலத்தில் பதிவான மூன்றாவது சம்பவமாகும்” என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “இந்திய அதிகாரிகள் 190-க்கும் மேற்பட்ட தொடர்புகளை கண்காணித்து வருகின்றனர், இதுவரை யாருக்கும் நோய் உருவாகவில்லை.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அதிகாரிகள் நோய் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகரித்துள்ளனர். சுகாதார அமைப்புகளில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தொடர்ந்து தகவல் வழங்கி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அமெரிக்க அதிபருக்கே இந்நிலையா? விமானத்துக்கு என்னப்பா ஆச்சு? பரபரப்பு!
Thailand Masters quarterfinals: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் இஷராணி பாருவா, தென் கொரியாவின் சங் ஷுவோ யுன்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்….
Harry Brook Wellington incident : இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஹாரி புரூக் கடந்த வாரம் பி.பி.சி ஸ்போர்ட்ஸ்-க்கு அளித்த பேட்டியில் வெலிங்டனில் நடந்த சம்பவத்தை…
Sanju Samson: சஞ்சு சாம்சன் தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் முதல் T20I போட்டியை ஆடத் தயாராகிறார்….
Michael Nobbs Passes Away: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வீரர் மைக்கேல் நாப்ஸ் 72 வயதில் காலமானார்….
T20 World Cup: 2026 டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர், விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது….
Pakistan in T20 World Cup 2026: பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை 2026-இல் பங்கேற்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இறுதி முடிவு பாகிஸ்தான்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்