London: பாகிஸ்தானியர் மிரட்டல்.. லண்டனில் 16 ஆண்டுகள் ரெஸ்டாரண்டை மூடிய இந்தியர்!
London: பாகிஸ்தானியர் மிரட்டல்.. லண்டனில் 16 ஆண்டுகள் ரெஸ்டாரண்டை மூடிய இந்தியர்!

Published on: February 26, 2026 at 3:53 pm
Updated on: February 26, 2026 at 4:47 pm
லண்டன், பிப். 26 2026: லண்டனில் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கிய இந்திய உணவு வகைகளை வழங்கும் உணவகமான ரங்க்ரெஸ் அடுத்த மாதம் மூடப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “மறக்க முடியாத 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த மாதம் ஹேமர்ஸ்மித்தின் ராங்ரெஸ் உணவகத்தை மூடுவதற்கான கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உரிமையாளர் ஹர்மன் சிங் கபூர், பாகிஸ்தானியர்களின் தொடர் அச்சுறுத்தல்கள், செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்கள் பின்னணி
2023இல் கலிஸ்தான் இயக்கத்தை விமர்சிக்கும் வீடியோ வெளியிட்டதன் பின் அச்சுறுத்தல்கள் தொடங்கின. இந்திய தூதரகத்தின் சேதத்திற்குப் பின் கலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறுகிறார். மனைவி, குழந்தைகள் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், தவறான அழைப்புகள், “கலிஸ்தான் ஜிந்தாபாத்”, “இந்துஸ்தான் முர்தாபாத்” என்று கோஷமிடச் சொன்னதாகவும் புகார் தெரிவித்துள்ளார். போலீஸ் ஆதரவு போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இப்போது முழு நேர ஆக்டிவிசத்திற்கு திரும்புகிறார். “என் வணிகத்தை குலைக்கலாம், ஆனால் என் உறுதியை இல்லை. இப்போது இன்னும் வலுவாக வருகிறேன்” என்கிறார். மேலும், வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளதுஃ வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதோடு பலர் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர்.. பிரதமர் மோடி வரலாற்று சாதனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com