Massive explosion hits the Iranian port: அமெரிக்கா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையின் போது ஈரானின் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், 4 பேர் கொல்லப்பட்டனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Massive explosion hits the Iranian port: அமெரிக்கா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையின் போது ஈரானின் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், 4 பேர் கொல்லப்பட்டனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: April 26, 2025 at 7:30 pm
தெஹ்ரான், ஏப்.26 2025: ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் சனிக்கிழமை (ஏப்.26 2025) ஏற்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் வெடிப்பில் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், தீயை அணைக்க துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஈரான் துறைமுகத்தில் வெடிப்பு
BREAKING: Massive explosion hits the Iranian port of Bandar Abbas pic.twitter.com/PDNvcmCVOi
— BNO News (@BNONews) April 26, 2025
மேலும் துறைமுகத்தில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இருந்ததால், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்த வெடிப்பு பல கிலோமீட்டர்களுக்குள் ஜன்னல்களை உடைத்தது, குண்டுவெடிப்புக்குப் பிறகு காளான் மேகம் உருவாவதை சமூக ஊடக வீடியோக்கள் காட்டுகின்றன.
இந்த துறைமுகம் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே சுமார் 1,050 கிலோமீட்டர் தொலைவில், பாரசீக வளைகுடாவின் குறுகிய நுழைவாயிலான ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ளது. மேலும், இதன் வழியாக உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் கடந்து செல்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்.. ஈரான் அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com