பரபரக்கும் பஹ்ரைன்.. மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்!

US-Israel Iran War: பஹ்ரைனின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பாப்கோ மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Published on: March 9, 2026 at 12:27 pm

துபாய், மார்ச் 9, 2026: பஹ்ரைனின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பாப்கோ மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியான செய்தியில், திங்கட்கிழமை பஹ்ரைனின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பாப்கோ சுற்றுவட்டாரத்தில் அடர்ந்த புகை காணப்பட்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரான் ட்ரோன் தாக்குதலால் சித்ரா (Sitra) பகுதியில் காயங்களும் சேதங்களும் ஏற்பட்டதாக பஹ்ரைன் அரசு தெரிவித்தது. ஈரான் வளைகுடா நாடுகளுக்கு எதிராக பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சவுதி அரேபியா திங்கட்கிழமை ஷெய்பா எண்ணெய் களத்துக்கு சென்ற நான்கு ட்ரோன்களை வீழ்த்தியதாக தெரிவித்தது.

இதையும் படிங்க: ஆறு மாதங்கள் கடும் போர் நடத்த முடியும்: அமெரிக்காவுக்கு ஈரான் பதில்

அவை நாட்டின் ருப் அல்-காலி பாலைவனத்தில் தடுக்கப்பட்டன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணை தாக்குதலுக்கு எதிராக செயல்படுகின்றன என்று தெரிவித்தது. இதற்கிடையில், இஸ்ரேல் ஈரானின் மத்திய பகுதிகளில் புதிய தாக்குதல்களை நடத்தி, லெபனான் தலைநகரான பெய்ரூத்தில் ஹெஸ்பொல்லா தளங்கள் எனக் கூறப்படும் இடங்களையும் குறிவைத்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் புதிய தலைவர் தேர்வு

மேற்கு ஆசியாவில் மோதல் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், ஈரான் தனது புதிய உச்சத் தலைவராக ஆயத்துல்லா மொஜ்தபா காமனெயியை தேர்வு செய்துள்ளது. மொஜ்தபா, அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com