Papal conclave: புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க 4 இந்திய கார்டினல்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Papal conclave: புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க 4 இந்திய கார்டினல்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on: April 22, 2025 at 2:14 pm
Updated on: April 22, 2025 at 3:33 pm
வாடிகன், ஏப்.22 2025: ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப் ஆண்டவர் போர் பிரான்சிஸ் 2025 ஏப்ரல் 21 அன்று தன்னுடைய 88 வயதில் மரணமடைந்தார். அவருடைய இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கார்டினல்கள்வாடிகனில் கூடியுள்ளனர். இதில் பங்கேற் இந்தியாவைச் சேர்ந்த நான்கு கார்டினல்கள் தேர்வாகியுள்ளனர்.
கார்டினல் ஃபிலிப் நேரி பெர்ராவ் (72)
கோவா மற்றும் டாமனின் பேராயர் ஆவார். இவர் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு மற்றும் ஆசிய ஆயர்கள் மாநாடுகளின் கூட்டமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
கார்டினல் பேசலியோஸ் கிளீமிஸ் (64)
திருவனந்தபுரத்தை தளமாகக் கொண்ட சிரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் மேஜர் பேராயர் மற்றும் கத்தோலிக்கர்கள் மற்றும் சிரோ-மலங்கரா திருச்சபையின் சினோடின் தலைவர் ஆவார்.
கார்டினல் ஆண்டனி பூலா (63)
இந்தியாவின் முதல் தலித் கார்டினலாக வரலாற்று படைத்த ஹைதராபாத் பேராயர் ஆவார்.
கார்டினல் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு (51)
கேரளாவின் சாங்கனாசேரியைச் சேர்ந்தவர். சர்கோவல்லாசியோன் அப்பியாவின் செயின்ட் அன்டோனியோ டி படோவாவின் கார்டினல்-டீக்கன் மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான டிகாஸ்டரியின் தலைவர் ஆவார். 2021 முதல் போப் பிரான்சிஸின் வெளிநாட்டு பயணங்களை ஒருங்கிணைத்துள்ளார்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் ஆந்திர மாணவி உயிரிழப்பு.. மே மாதம் பட்டம் பெறவிருந்த நிலையில் சோகம்!
இந்தியாவைச் சேர்ந்த இந்த 4 கார்டினல்கள், புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான செயல்முறையில் பங்கேற்கின்றனர். போப்பைத் தேர்ந்தெடுக்கும் மாநாடு, சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வரை இந்த வாக்களிப்பு தினமும் நடைபெறும்.
புதிய போப்பைத் தேர்ந்தெடுத்த பிறகு, ‘ஹேபமுஸ் பாப்பம்’ (Habemus Papam)என்ற அறிவிப்புடன் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுவார். பின்னர் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் மைய பால்கனியில் தோன்றி தனது முதல் ஆசீர்வாதத்தை வழங்குவார்” என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : கனடாவில் இந்திய மாணவி மீது துப்பாக்கிச் சூடு.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com