High-Speed Internet: அதிவேக இணையம் இருந்தபோதிலும் மெதுவான வைஃபை இணைப்பு பிரச்சணை ஏற்படுகிறதா? இந்த சில எளிய திருத்தங்களை செய்தால் உங்கள் இணையத்தின் வேகத்தை தொடர்ந்து குறையாமல் பெறலாம்.
High-Speed Internet: அதிவேக இணையம் இருந்தபோதிலும் மெதுவான வைஃபை இணைப்பு பிரச்சணை ஏற்படுகிறதா? இந்த சில எளிய திருத்தங்களை செய்தால் உங்கள் இணையத்தின் வேகத்தை தொடர்ந்து குறையாமல் பெறலாம்.
Published on: March 17, 2025 at 8:16 pm
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் வைஃபை கனெக்ஷனை பயன்படுத்த தொடங்கி விட்டனர். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிறகு ரிமோட் வொர்க் காரணமாக வீட்டிலிருந்தே வேலை மற்றும் ஆன்லைன் கல்வி போன்றவற்றின் காரணமாக இந்த பிராட்பேண்ட் கனெக்ஷன் சேவையை பலரும் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக வரம்பற்ற டேட்டா மற்றும் வேகமான இணைய சேவையையும் பெற முடியும்.
இருப்பினும் தற்போது இந்த வலுவான சேவையை கொண்டுள்ள போதும், போதிலும் மெதுவான இணைய சேவையால் சிலர் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. தற்போது இதன் வேகத்தை மேம்படுத்துவதற்கான சில எளிய வழிகளை இப்போது பார்க்கலாம்
சரியான இடம்
பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று ரூட்டரை தவறான இடத்தில் வைப்பது. குடும்ப உறுப்பினர்கள் பலரும் இதை பயன்படுத்துவதாக இருந்தால் மையமாக உள்ள இடத்தில் வைப்பது சிறப்பாக இருக்கும்.
ரூட்டரை சுவர்களுக்கு அருகிலோ, மூலைகளிலோ அல்லது அலமாரிகளுக்குள்லோ வைப்பதைத் தவிர்க்கவும்.
உங்கள் வீட்டில் பல தளங்கள் இருந்தால், சிறந்த கவரேஜுக்கு வைஃபை ரேஞ்ச் எக்ஸ்டெண்டரைப் பயன்படுத்துங்கள்.
ரூட்டரின் பேண்ட் அமைப்பு
பெரும்பாலான நவீன ரூட்டர்கள் இரண்டு அதிர்வெண் பேண்டுகளில் இயங்குகின்றன. தேவைக்கு ஏற்றவாறு அவற்றை பயன்படுத்துங்கள்.
5 GHz பேண்ட்
வேகமான இணைய வேகத்தை வழங்குகிறது. ஆனால் சிக்னல் அதிக தூரம் இருக்காது. கேமிங், ஸ்ட்ரீமிங் மற்றும் அதிவேக பதிவிறக்கங்களுக்கு இது சிறந்தது.
2.4 GHz பேண்ட்
பரந்த கவரேஜை வழங்குகிறது. ஆனால் வேகம் குறையவாக உள்ளது. பேசிக் ரோமிங், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் மற்றும் நீண்ட தூர இணைப்புக்கு ஏற்றது.
உங்களுக்கு வேகம் தேவைப்பட்டால், 5 GHz க்கு மாற்றிக் கொள்ளலாம். சிறந்த ரேஞ்ச் தேவைப்பட்டால், 2.4 GHz யையே பயன்படுத்தலாம்.
அருகில் இருக்கும் பொருட்கள்
உலோகப் பொருட்களை ரூட்டரிலிருந்து தூரமாக வைக்க வேண்டும்.
பலர் இதை அறியாமல் ரூட்டர்களை குளிர்சாதன பெட்டிகள், எஃகு தளபாடங்கள் அல்லது மைக்ரோவேவ் போன்ற உலோகப் பொருட்களுக்கு அருகில் வைப்பார்கள். உலோகப் பொருட்கள் வைஃபை சிக்னல்களைத் தடுத்து பலவீனப்படுத்துகின்றன, இதனால் வேகம் குறையும். மர மேசை அல்லது அலமாரி போன்ற இடங்களில் வைக்கவும்.
முடிந்தால், கம்பியூட்டர் அல்லது கேமிங் கன்சோல்கள் போன்ற அதிவேக மற்றும் நிலையான இணையம் தேவைப்படும் சாதனங்களுக்கு ஈதர்நெட் கேபிள் பயன்படுத்தவும்.
ரீஸ்டார்ட் செய்தல்
ரீஸ்டார்ட் செய்யாமல் தொடர்ந்து ஆன் செய்து வைத்திருந்தால், அதன் வேகத்தில் குறைவும், செயல் திறனில் சிக்கலையும் ஏற்படுத்தும்.
சிறப்பான செயல்பாடுக்கு 2-3 நாட்களுக்கு ஒருமுறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
உங்கள் ரூட்டரில் உள்ளமைக்கப்பட்ட டைமர் அம்சம் இருந்தால், ஆஃப்-பீக் நேரங்களில் தானாகவே ரீஸ்டார்ட் செய்ய அதை செட் செய்யவும்.
இதையும் படிங்க இந்தியா டாப்.. 1 கோடி வீடியோக்களை நீக்கிய யூ-ட்யூப்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com