NITI Aayog Agriculture : இந்தியாவின் வேளாண்மைத் துறை எதிர்கால வளர்ச்சியை முன்னெடுக்க வலுவான திறன் கொண்டுள்ளது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பேரி தெரிவித்துள்ளார்.
NITI Aayog Agriculture : இந்தியாவின் வேளாண்மைத் துறை எதிர்கால வளர்ச்சியை முன்னெடுக்க வலுவான திறன் கொண்டுள்ளது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பேரி தெரிவித்துள்ளார்.

Published on: April 9, 2026 at 1:00 pm
புதுடெல்லி, ஏப்.9, 2026: நாட்டின் வேளாண்மைத் துறை எதிர்கால வளர்ச்சியை முன்னெடுக்க வலுவான திறன் கொண்டுள்ளது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பேரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “இந்திய வேளாண்மைத் துறையின் திறன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க முக்கிய பங்காற்றும். உணவு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளது” என்றார்.
மேலும், “டிஜிட்டல் கருவிகள், பாசன முறைகள், மற்றும் புதுமையான விவசாய நடைமுறைகள் வளர்ச்சியை வேகப்படுத்தும்” என்று கூறிய அவர், “இந்தியா, உலக தெற்கு நாடுகளுக்கு வேளாண்மைத் துறையில் முன்னுதாரணமாக இருக்கும்” எனவும் தெரிவித்தார்.
மேலும், அவர், “நில உற்பத்தித் திறனும், தொழிலாளர் உற்பத்தித் திறனும் மேம்பட வேண்டும்; அப்போதுதான் நிலையான பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும்” என்றார்.
இதற்கிடையில், உலகளாவிய உதாரணங்களைச் சுட்டிக்காட்டிய அவர், சிறிய நாடாக இருந்தாலும் நெதர்லாந்து மிகப்பெரிய வேளாண் ஏற்றுமதி நாடாக உருவெடுத்தது, அதற்கு காரணம் தொழில்நுட்பம் மற்றும் வளங்களை தீவிரமாகப் பயன்படுத்தியதுதான் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சி 6.6 சதவீதமாக உயர்வு.. உலக வங்கி அதிரடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com