ஏ.ஐ துறையில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு.. ஜியோ முகேஷ் அம்பானி அதிரடி

Mukesh Ambani: செயற்கை நுண்ணறிவு வேலைகளை நீக்காது, புதிய வாய்ப்புகளை உருவாக்கும்” என்று ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வலியுறுத்தினார்.

Published on: February 20, 2026 at 10:02 pm

புதுடெல்லி, பிப்.20, 2026: ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, “ஏ.ஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் வேலைகளை நீக்காது, புதிய வாய்ப்புகளை உருவாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

2026 பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற இந்தியா AI இம்பாக்ட் சம்மிட் நிகழ்வில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்புகளை அழிப்பதற்குப் பதிலாக புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறினார்.
மேலும், அவர், இந்தியா முழுவதும் முன்னேற்றமான ஏ.ஐ செயற்கை நுண்ணறிவு அடித்தளங்களை உருவாக்க $110 பில்லியன் (₹10 லட்சம் கோடி) முதலீட்டு திட்டத்தை அறிவித்தார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜியோ 10 லட்சம் கோடி முதலீடு

முகேஷ் அம்பானியின் உரையின் முக்கிய அம்சம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) மற்றும் அதன் தொலைத்தொடர்பு பிரிவு ஜியோ, அடுத்த ஏழு ஆண்டுகளில் ₹10 லட்சம் கோடி (சுமார் $110 பில்லியன்) முதலீடு செய்து, இந்தியா முழுவதும் ஏ.ஐ அடித்தளங்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும் என்ற அறிவிப்பாகும்.

இது, இந்தியாவின் வரலாற்றில் தனியார் துறையிலிருந்து செயற்கை நுண்ணறிவுக்கான மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். இது, இணைப்பு சேவைகளில் முன்னணி நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ், ஏ.ஐ புதுமைகளின் இயக்கியாக மாறும் நோக்கத்தைக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவில் ஜியோமி 17 சீரிஸ்.. விலை என்னவாக இருக்கும்?

அன்புமணி, கிறிஸ்டோபர் உள்பட 19 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு.. சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம்! VP Radhakrishnan Swears In 19 New Rajya sabha Members

அன்புமணி, கிறிஸ்டோபர் உள்பட 19 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு.. சி.பி. ராதாகிருஷ்ணன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com