Ray Ban smart glasses: ரே பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மெட்டா உறுதிப்படுத்தி உள்ளது. இதன் விலை என்ன தெரியுமா?
Ray Ban smart glasses: ரே பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மெட்டா உறுதிப்படுத்தி உள்ளது. இதன் விலை என்ன தெரியுமா?
Published on: April 26, 2025 at 11:29 pm
புதுடெல்லி, ஏப்.26 2025: பிரபலமான ரே பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் விரைவில் அமல்படுத்தப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் ரே பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் கிடைப்பது குறித்தும் அதன் விலை தொடர்பாக தகவல்களும் வெளியாகியுள்ளன. எனினும், விலை தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
இந்தியாவில் அறிமுகம் எப்போது?
அந்த வகையில், இந்தியாவில் மெட்டா ரே பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் அறிமுகம் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த தயாரிப்பை இறக்குமதி செய்வதற்கான அதிக வரிகளை நிறுவனம் சேர்க்க முடிவு செய்தால், இந்தியாவில் விலை ஒரு சவாலாக மாறும் என்றும் அஞ்சப்படுகிறது.
விலை என்ன?
இந்த நிலையில், இந்தியாவில் மெட்டா ரே பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் சுமார் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
பயன்கள் என்ன?
இந்த செயற்கை தொழில்நுட்பத்தில் (AI) இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடிகள், பயணத்தின்போது கேள்விகளைக் கேட்கவும், உண்மையான நேரத்தில் பதில்கள் மற்றும் தகவல்களைப் பெறவும் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பட்ஜெட் ஃப்ரெண்லி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய ரெட்மீ: விலையை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com