WhatsApp image: மகாராஷ்டிராவில் வாட்ஸ்அப்பில் வந்த படத்தை பதிவிறக்கம் செய்தவரின் 2 லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது.
WhatsApp image: மகாராஷ்டிராவில் வாட்ஸ்அப்பில் வந்த படத்தை பதிவிறக்கம் செய்தவரின் 2 லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது.
Published on: April 22, 2025 at 3:03 pm
மும்பை, ஏப். 22 2025: மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரதீப் ஜெயின் என்ற 28 வயது நபர், தனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட ஒரு படத்தை பதிவிறக்கம் செய்ததன் மூலம் ₹2.01 லட்சம் பணத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதீப்பிற்கு காலையில் இருந்தே அறிமுகமில்லாத நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. “இந்த நபரை உங்களுக்கு தெரியுமா?” என்ற மெசேஜும் வந்துள்ளது.
முதலில் அந்த அழைப்பை அதை புறக்கணித்தாலும், தொடர்ந்து அழைப்பு வந்ததால், மதியம் 1:35 மணியளவில் அந்த படத்தை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன் பின்னர் அவரது ஃபோன் ஹேக் செய்யப்பட்டு, சில நிமிடங்களில் அவரது கனரா வங்கி கணக்கிலிருந்து ₹2.01 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனை ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஏடிஎம் மூலம் நடந்துள்ளது.
இதையும் படிங்க ஏர்டெல், வோடபோன் இனி காலி; ரிலையன்ஸ் ஜியோ 90 நாள் பிளான் தெரியுமா?
இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த படம், முதியவரின் புகைப்படமாக தோன்றினாலும், அது லீஸ்ட் சிக்னிஃபிகண்ட் பிட் (LSB) ஸ்டெகனோகிராபி எனப்படும் உயர் தொழில்நுட்ப ஹேக்கிங் முறையில் உருவாக்கப்பட்ட மோசடி சதி என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் படங்களை பதிவிறக்கம் செய்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற ஹேக்கிங்-களுக்கு .jpg, .png, .mp3, .mp4 மற்றும் PDF போன்ற ஃபைல் ஃபார்மட் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் படங்கள் அல்லது கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்ஜெட் ஃப்ரெண்லி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய ரெட்மீ: விலையை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com