பால் ஆதார் என்றால் என்ன? யார் யார் தகுதி பெறுவார்கள்? எப்படி விண்ணப்பிப்பது?

How to apply Blue aadhar: ப்ளூ ஆதார் அல்லது பால் ஆதார் எனப்படும் ஆதார் அடையாள ஆவண அட்டை யாருக்கு வழங்கப்படுகிறது? இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு விவரம் உள்ளே அளிக்கப்பட்டுள்ளது.

Published on: May 5, 2025 at 4:26 pm

சென்னை, மே 5 2025: இந்திய அரசாங்கத்தால் வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக ப்ளூ ஆதார் கார்டு (Blue Aadhaar Card or Baal Aadhaar) வழங்கப்படுகிறது. இது இந்திய அரசு வழங்கும் சிறப்பு அடையாள அட்டையாகும். இது குழந்தைகளுக்கான தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது. ப்ளூ ஆதார் கார்டு, உங்கள் குழந்தைக்கு ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இது கல்வி, சுகாதாரம் மற்றும் அரசு நலத்திட்டங்களை பெற உதவுகிறது.

ப்ளூ ஆதார் கார்டின் முக்கிய அம்சங்கள்

  • 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ப்ளூ ஆதார் கார்டு பெறலாம்.
  • பயோமெட்ரிக் தகவல்கள் தேவையில்லை. குழந்தையின் புகைப்படம் மட்டும் பதிவு செய்யப்படும்.
  • 12 இலக்க தனித்துவ அடையாள ஆதார் எண்
  • ப்ளூ ஆதார் கார்டு குழந்தை 5 வயதை அடையும் வரை செல்லுபடியாகும்.
  • இந்த அட்டைக்கு பதிய கட்டணம் எதுவும் தேவையில்லை. முற்றிலும் இலவசம்

ப்ளூ ஆதார் கார்டின் பயன்பாடுகள்

  • பள்ளி சேர்க்கை மற்றும் கல்வி உதவித்தொகைகள் பெற உதவுகிறது.
  • குழந்தை நலத்திட்டங்கள் மற்றும் சுகாதார சேவைகளை பெறலாம்.
  • வங்கி கணக்கு திறப்பதற்கான அடையாள ஆவணமாக பயன்படுகிறது.
  • மருத்துவ அவசர நிலைகளில் குழந்தையின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ள உதவுகிறது.
  • பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை எளிதாக அணுக முடியும்.

தேவையான ஆவணங்கள்

  • குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் சான்றிதழ்
  • தாயார் அல்லது தந்தையின் ஆதார் அட்டை
  • முகவரி சான்று (தாயார்/தந்தையின் ஆதார் அடிப்படையில்)

பதிவு செய்வது எப்படி?

  • அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு குழந்தையுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் தேவையான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
  • பதிவு படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
  • ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, பதிவு அடையாள எண் (Enrollment ID) வழங்கப்படும்.
  • ப்ளூ ஆதார் அட்டை 2-4 வாரங்களில் தபால் மூலம் அல்லது ஆன்லைனில் கிடைக்கும்.

5 வயதுக்கு பிறகு என்ன செய்ய வேண்டும்?

  • குழந்தை 5 வயதை அடைந்த பிறகு, ப்ளூ ஆதார் கார்டை வழக்கமான ஆதார் கார்டாக மாற்றிக் கொள்ளலாம்.
  • அதற்கு பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.
  • பதினைந்து வயதில் மீண்டும் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்து கொள்ள வேண்டும்.
  • இந்த புதுப்பிப்புகளை செய்யவில்லையெனில், ஆதார் அட்டை தற்காலிகமாக செயலிழக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க ஸ்மார்ட்போன் பேட்டரி உடனே காலியாகுதா? இந்த 5 ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com