Gujarat launches SpaceTech Policy: குஜராத் விண்வெளி தொழில்நுட்பக் கொள்கையை அறிமுகப்படுத்துகிறது. இது, 5 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Gujarat launches SpaceTech Policy: குஜராத் விண்வெளி தொழில்நுட்பக் கொள்கையை அறிமுகப்படுத்துகிறது. இது, 5 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Published on: April 18, 2025 at 4:50 pm
அகமதாபாத், ஏப்.18 2025: அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கும் வகையில், குஜராத் அரசு வியாழக்கிழமை குஜராத் விண்வெளி தொழில்நுட்பக் கொள்கையை வியாழக்கிழமை (ஏப்.17 2025) அறிமுகப்படுத்தியது.
இதில், 25,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டமும் உள்ளது. மேலும், முதலமைச்சர் பூபேந்திர படேலின் தலைமையில், விண்வெளி கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இது குறித்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதன்மை செயலாளர் மோனா கந்தர், “புதிய கொள்கையின் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்து 25,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.
இதற்கிடையில், இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாயின் மரபால் இந்தக் கொள்கை ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் விண்வெளிப் பொருளாதாரத்தில் தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் பொதுவான தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஒரு பிரத்யேக விண்வெளி உற்பத்தி பூங்காவை உருவாக்கவும் குஜராத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விழிஞ்சம் துறைமுகத்தை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி.. தேதி என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com