Google lays off 200 workers: கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
Google lays off 200 workers: கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
Published on: May 9, 2025 at 1:40 pm
சென்னை, மே 9 2025: தனது நிறுவனத்தின் உலகளாவிய வணிக பிரிவில் பணியாற்றும் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் செயல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவக மையங்கள்(டேட்டா சென்டர்கள்) போன்ற முக்கிய துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் இந்த நடிவடிக்கை மெற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் செலவுகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த புதிய பணிநீக்கம், கடந்த மாதம் Android, Pixel மற்றும் Chrome போன்ற தயாரிப்புகளை நிர்வகிக்கும் தளங்கள் மற்றும் சாதனங்கள் பிரிவில் மேற்கொண்ட பணிநீக்கத்திற்குப் பின் இது நடைபெறுகிறது. ஜனவரி 2023 இல், கூகுள் 12,000 பேரை குறைக்கும் திட்டத்தை அறிவித்தது.
இது தனது உலகளாவிய பணியாளர்களில் 6% ஆகும். 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 நிலவரப்படி, ஆல்பாபெட் நிறுவனத்தில் 1,83,323 பேர் பணியாற்றினர். பேஸ்புக் மெட்டா ஜனவரியில் அதன் “குறைந்த செயல்திறன் கொண்டவர்களில்” சுமார் 5% பேரை பணிநீக்கம் செய்தது. அதே நேரத்தில் மெஷின் லேர்னிங் இஞ்சினியர்களை விரைவாக பணியமர்த்துவதை முன்னெடுத்தது.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பணிநீக்கங்கள், தொழில்நுட்ப துறையில் நிலவும் மாற்றங்களை பிரதிபலிக்கின்றன.
இதையும் படிங்க இந்தியாவில், ரே பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் விரைவில் அறிமுகம்: விலை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com