India Book Market Report: Federation of Indian Publishers (FIP) மற்றும் NielsenIQ BookData இணைந்து, India Book Market Report – Edition 3 வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளன.
India Book Market Report: Federation of Indian Publishers (FIP) மற்றும் NielsenIQ BookData இணைந்து, India Book Market Report – Edition 3 வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளன.

Published on: January 16, 2026 at 8:57 pm
Updated on: January 16, 2026 at 9:15 pm
புதுடெல்லி, ஜன.16, 2026: புத்தக வெளியீட்டு துறையில் ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பீடு செய்ய, Federation of Indian Publishers (FIP) மற்றும் NielsenIQ BookData இணைந்து India Book Market Report – Edition 3 வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளன. இந்த அறிக்கை, அச்சு, டிஜிட்டல் மற்றும் ஆடியோபுக் வடிவங்களை உள்ளடக்கி, அவற்றின் பொருளாதார பங்களிப்பை மதிப்பீடு செய்யும்.
இந்த அறிவிப்பு, புதுடெல்லி உலக புத்தகக் கண்காட்சி 2026-இல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிக்கை ஆகஸ்ட்–செப்டம்பர் 2026-இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, FIP துணைத் தலைவர் பிரணவ் குப்தா, “முந்தைய ஆய்வுகள் பெரும்பாலும் அச்சு வெளியீட்டில் கவனம் செலுத்தின. இம்முறை, அச்சு புத்தக சந்தையுடன் டிஜிட்டல் வெளியீடு மற்றும் ஆடியோபுக் வடிவங்களையும் சேர்த்து, அவற்றின் பொருளாதார தாக்கத்தையும் மதிப்பிடுகிறது” என்று கூறினார்.
2022 அறிக்கையின்படி, இந்தியாவில் 24,000-க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள் உள்ளனர்; ஆண்டுதோறும் 2.5 லட்சம் ISBN எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. அச்சு சந்தையில் பள்ளி கல்வி 71%, உயர்கல்வி 25%, மற்றும் வர்த்தக வெளியீடு 4% பங்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2026ஆம் ஆண்டிலும் பணி நீக்கம் தொடரும்.. டி.சி.எஸ் அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com