MK Stalin: ரிசல்ட் எதுவானாலும் அது முடிவல்ல என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
MK Stalin: ரிசல்ட் எதுவானாலும் அது முடிவல்ல என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
Published on: May 8, 2025 at 11:32 am
சென்னை, மே 8 2025: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. மாணவர்கள் தங்கள் முடிவுகளை dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக தேர்வு முடிவுகள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,
தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
#PlusTwo தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) May 8, 2025
தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள்…
இதையும் படிங்க 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; இணையத்தில் இப்படி பாருங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com