Assembly Election 2026: பொதுத் தொகுதிக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும், தனித் தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும் அமைப்புச் செயலாளர் சு.குருநாதனிடம் வழங்க வேண்டும்” என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Assembly Election 2026: பொதுத் தொகுதிக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும், தனித் தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும் அமைப்புச் செயலாளர் சு.குருநாதனிடம் வழங்க வேண்டும்” என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Published on: March 26, 2026 at 8:01 pm
சென்னை, மார்ச் 26, 2026: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.கழகம் ஒதுக்கீடு செய்துள்ள தொகுதிகளில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகக் கண்மணிகள் 27.03.2026 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “பொதுத் தொகுதிக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும், தனித் தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும் பிற்பகல் 3 மணிக்குள்ளாக அமைப்புச் செயலாளர் சு.குருநாதனிடம் வழங்க வேண்டும்.
பிற்பகல் 3.30 மணி அளவில், ஆட்சி மன்றக் குழுவினர் முன்னிலையில் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படும் பெயர்கள் உடனடியாக அறிவிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருவாரூர் VS சேப்பாக்கம்.. எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் உதயநிதி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com