Former Minister R.P. Udayakumar: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசுவதாக குற்றம் சாட்டி உள்ள அதிமுக அவையில் இருந்து இன்று (ஏப்ரல் 17 2025) வெளிநடப்பு செய்தது.
Former Minister R.P. Udayakumar: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசுவதாக குற்றம் சாட்டி உள்ள அதிமுக அவையில் இருந்து இன்று (ஏப்ரல் 17 2025) வெளிநடப்பு செய்தது.
Published on: April 17, 2025 at 6:01 pm
சென்னை ஏப்ரல் 17 2025: தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக இன்று (ஏப்ரல் 17 2025) வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், ” தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசுகிறார்” என குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் திமுக அதிமுக முதல் தொடர்ந்து நடக்கிறது. கடந்த இரு தினங்களாகவே அதிமுக தொடர்ந்து வழிநடப்பு செய்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தமிழக சபாநாயகர் மு. அப்பாவு, “ஒரு தரப்பாக நடந்து கொள்கிறார்” என அப்போது குற்றம் சாட்டினார்கள்.
அப்போது தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், ” திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக கொடும் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் அறிக்கை வேறு வெளியாகி உள்ளது. இது பற்றி கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்படுகிறது” என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே என் நேரு, பொன்முடி உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்து விட்டார். இது தொடர்பாகவும் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இன்று கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கூறும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது மௌனமாக இருந்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து திமுக இரட்டை தன்மையுடன் திகழ்வதாகவும்; சட்டப்பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி மறுக்கிறார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் சினிமாவில் சமந்தா.. க்யூவில் நிற்கும் முன்னணி ஹீரோக்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com