Tamilisai Soundararajan: இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியோடு எந்த பிரஸரில் (Pressure) கூட்டணி வைத்தீர்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தி.மு.க.வுக்கு கேள்வியெழுப்பி உள்ளார்.
Tamilisai Soundararajan: இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியோடு எந்த பிரஸரில் (Pressure) கூட்டணி வைத்தீர்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தி.மு.க.வுக்கு கேள்வியெழுப்பி உள்ளார்.
Published on: May 4, 2025 at 10:26 pm
சென்னை, மே 4 2025: காங்கிரஸோடு, திராவிட முன்னேற்ற கழகம் எந்த அழுத்தத்தில் கூட்டணி வைத்தது என பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வியெழுப்பி உள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாயத்தில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வியெழுப்பினார்கள்.
தி.மு.க. காங்கிரஸ் எந்தப் பிரஸ்ஸரில் கூட்டணி?
இதற்குப் பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், “இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியோடு எந்த பிரஸரில் (Pressure) கூட்டணி வைத்தீர்கள்? என பதில் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “அதிமுகவை பாரதிய ஜனதாவினர் பிரஸ்ஸர் செய்து கூட்டணி வைத்தார்கள் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக, பாஜக கூட்டணி அமைந்த பின்னர் அவர்தான் பிரஸ்ஸரில் இருக்கிறார் என்பது தெரிகிறது” என்றார்.
நான் கேட்கிறேன்.. எந்தப் பிரஸ்ஸரில் காங்கிரஸோடு நீங்கள் கூட்டணியில் இருக்கிறீர்கள். உங்கள் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ். எமர்ஜென்சி காலத்தில் உங்களை சிறையில் அடைத்தது காங்கிரஸ்.
இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது காங்கிரஸ். அவர்களுடன் நீங்கள் என்ன பிரஸ்ஸரில் கூட்டணி வைத்துள்ளீர்கள்?” என்றார்.
பிரஸ்ஸர் கூட்டணி அல்ல, பிளஸர் (Pleasure) கூட்டணி
இதையடுத்து அதிமுக பாரதிய ஜனதா கட்சி எந்த பிரஸ்ஸரிலும் (அழுத்தம்) அமையவில்லை. அது பிளசரில் (மகிழ்வுடன்) அமைந்த கூட்டணி என்றார்.
இதையும் படிங்க : 2026ல் டீ விக்கதான் போறீங்க.. த.வெ.க.வை தி.மு.க. மேடையில் கலாய்த்த லியோனி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com