MK Stalin: ‘1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைத்து அவர்களின் மனம் மகிழச் செய்தோம்’ என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
MK Stalin: ‘1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைத்து அவர்களின் மனம் மகிழச் செய்தோம்’ என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Published on: March 7, 2026 at 4:58 pm
சென்னை மார்ச் 7, 2026; தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்; இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “‘1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைத்து அவர்களின் மனம் மகிழச் செய்தோம்’ என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், “உலகை இயக்கும் பேராற்றலான அன்புக்குரிய தாய்மார்கள், சகோதரிகள் அனைவருக்கும் இனிய உலக மகளிர் நாள் வாழ்த்துகள்
திராவிட மாடல் அரசு, இந்த ஆட்சியையே மகளிரின் உயர்வுக்கான ஆட்சியாக நடத்தி வருகிறது; திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மகளிர், வெல்லும் தமிழ்ப் பெண்களாக வரலாறு படைக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிரையும் உயர்த்தும் சமூக விடுதலை இலக்கை 5 ஆண்டுகளில் அடைவோம்; ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு கனவை முன்னின்று நடத்தப் போவது மகளிர்தான்” எனவும் தெரிவித்துள்ளார்.
இடைத்தொடர்ந்து, “1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைத்து அவர்களின் மனம் மகிழச் செய்தோம்” எனவும் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; தமிழ்நாட்டில் ₹500 கோடி விஞ்ஞான ஊழல்.. அன்புமணி பரபரப்பு அறிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com