Sarathkumar: தனிமனித விமர்சனங்கள் மட்டும்தான் அரசியலா என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான சரத் குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
Sarathkumar: தனிமனித விமர்சனங்கள் மட்டும்தான் அரசியலா என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான சரத் குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: February 25, 2026 at 1:17 pm
Updated on: February 25, 2026 at 1:18 pm
சென்னை, பிப்.25, 2026: நடிகர் விஜய் கட்சியின் கொள்கை கோட்பாடு என நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான சரத் குமார் செவ்வாய்க்கிழமை (பிப்.24, 2026) கேள்வியெழுப்பினார். இது குறித்து பேசிய அவர், “விஜய் தன்னுடைய கொள்கை கோட்பாடு எதனையும் இதுவரை சொல்லவில்லை; உரக்கப் பேசி ஏதோ கருத்துக்களை பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசுகிறார்” என விமர்சித்தார்.
மேலும், “தனிமனிதரைப் பற்றி பேசி விமர்சனம் செய்வதுதான் அரசியல் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி அந்தக் கட்சி நடக்கும்” எனவும் அவர் கேள்வியெழுப்பினார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸூம், அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வும் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திடீர் இட்லி, சாம்பார்… சசிகலா கட்சியை விமர்சித்த டி.டி.வி தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com