RS Bharathi : பொதுவெளியில் கூட்டணி கட்சியினர் குறித்து விவாதிப்பதை தி.மு.க.வினர் தவிர்க்க வேண்டும் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
RS Bharathi : பொதுவெளியில் கூட்டணி கட்சியினர் குறித்து விவாதிப்பதை தி.மு.க.வினர் தவிர்க்க வேண்டும் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

Published on: January 28, 2026 at 12:35 pm
சென்னை, ஜன.28, 2026: காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மீது விவாதிக்க கூடாது என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி இணைந்தே சந்திக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத விதமாக அவர்கள் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த, தி.மு.க. மூத்தப் பிரமுகரும், அமைச்சருமான ஐ. பெரியசாமி, ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிப்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை என்றார்.
இது காங்கிரஸூக்கு அளித்த பதில் எனக் கருதப்பட்டது. இந்நிலையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சித்து வந்தனர்.
இதற்கிடையில், கூட்டணி கட்சியினர் குறித்து விவாாதம் கூடாது என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “பொதுவெளியில் கூட்டணி கட்சியினர் குறித்த கருத்துக்களை விவாதிப்பதை தி.மு.க.வினர் தவிர்க்க வேண்டும். மேலும், இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளால் எந்தப் பதிலும் இல்லை.
இதை தவிர்த்துவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தி.மு.க.வினர் தேர்தல் வெற்றிகளில் கவனம் செலுத்த வேண்டும்; கூட்டணி தொடர்பான முடிவுகளை தி.மு.க. தலைவர் உரிய நேரத்தில் அறிவிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய கட்சி தொடங்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., யார் இந்த முகம்மது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com