ராமதாஸ் வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்.. வந்தவாசியில் பரபரப்பு!

Assembly election 2026: ராமதாஸ் ஆதரவு வேட்பாளர், வந்தவாசியில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Published on: April 3, 2026 at 3:13 pm

வந்தவாசி, ஏப்.3, 2026: வந்தவாசியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள், ராமதாஸ் வேட்பாளர் முரளி சங்கர் கழுத்தில் கிடந்த பா.ம.க துண்டை அகற்ற வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தினார்கள். மேலும், அவரின் கழுத்தில் இருந்த துண்டை அகற்ற முயன்றனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், முரளி சங்கர் தனக்கு போதிய வாய்ப்புகள் வழங்கவில்லை எனக் கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ம.க. உள்கட்சி பிரச்னை

பா.ம.க.வில் உள்கட்சி பிரச்னை நிலவி வருகிறது. நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். இதற்கிடையில், ராமதாஸ் தனித்துப் போட்டி என்று அறிவித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் பிரதமர் மோடி.. அண்ணாமலைக்கு அழைப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com