PMK MLA Arul; “பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர்” என அக்கட்சியின் எம்.எல்.ஏ. அருள் கூறினார்.
PMK MLA Arul; “பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர்” என அக்கட்சியின் எம்.எல்.ஏ. அருள் கூறினார்.
Published on: June 29, 2025 at 8:29 pm
சென்னை, ஜூன் 29 2025: பா.ம.க எம்.எல்.ஏ அருள், “பதவிக்கு ஆசைப்படாதவர் மருத்துவர் ராமதாஸ் என்றார். பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸை சுற்றிலும் 3 தீய சக்திகள் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய பா.ம.க எம்.எல.ஏ. அருள், “மருத்துவர் ராமதாஸ் எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர்” என்றார். மேலும், 35 ஆண்டுகளாக மருத்துவர் ராமதாஸ் உடன் பயணித்து வருகிறேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “ராமதாஸை இழிவுப்படுத்துவதாக கூறி பாட்டாளி வர்கத்தை அன்புமணி இழிவுப்படுத்திவிட்டார். ராமதாஸூக்கு இழிவு ஏற்படும்போது பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்” என்றார். பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் மருத்தவர் ராமதாஸ்க்கும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணிக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இருவரும் தனித்தனியே செயல்படுகின்றனர். அன்புமணியின் தலைவர் பதவி பறிக்கப்பட்டு அவர் செயல் தலைவராக செயல்படுவார் என மருத்துவர் ராமதாஸ் கூறினார்.
ஆனால் இதனை ஏற்க அன்புமணி மறுத்துவிட்டார். அப்போது, அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மருத்துவர் ராமதாஸ் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : போலி உர விற்பனையை தடுப்பது தி.மு.க.வின் கடமை; டி.டி.வி தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com