MK Stalin to march in Chennai: பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு அளித்து மு.க. ஸ்டாலின் நாளை (மே 10 2025) நடைபயணம் மேற்கொள்கிறார்.
MK Stalin to march in Chennai: பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு அளித்து மு.க. ஸ்டாலின் நாளை (மே 10 2025) நடைபயணம் மேற்கொள்கிறார்.
Published on: May 9, 2025 at 3:43 pm
சென்னை, மே 9 2025: பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிராக போர் நடத்தும் நம்முடைய இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரவு பேரணியை சனிக்கிழமை (மே 10 2025) நடத்துகிறார்.
இது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிக்கையில், “பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிராக போர் நடத்தும் நம்முடைய இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நாளை 10-ஆம் தேதி மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இந்தப் பேரணியில், தி.மு.கவினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும். நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில், இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்ணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படும் இப்பேரணியில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.
— M.K.Stalin (@mkstalin) May 9, 2025
நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம்… pic.twitter.com/Pxw0Xu2FCb
மேலும், “இப்பேரணியில் பங்கேற்பது “நமது உரிமை”, “நமது கடமை என்ற அந்த லட்சிய உணர்வோடு கழகத்தினரும், மக்களும் ஓரணியில் திரண்டு பங்கேற்று நம்முடைய ஒற்றுமையையும், உறுதியையும் நாட்டிற்கு காட்டிடுவோம் என்று வாரீர்! வாரீர் !! என்று அன்புடன் அழைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க :ஸ்ரீநகர் விடுதியில் மாணவர்கள்.. அமித் ஷாவுக்கு வைகோ கடிதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com