MK Stalin: 2026ல் ஆட்சியமைக்க போவதும் தி.மு.க.தான் என அக்கட்சியின் தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஈரை பேனாக்கி, பேனை பேயாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மு.க. ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
MK Stalin: 2026ல் ஆட்சியமைக்க போவதும் தி.மு.க.தான் என அக்கட்சியின் தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஈரை பேனாக்கி, பேனை பேயாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மு.க. ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Published on: May 6, 2025 at 4:46 pm
Updated on: May 6, 2025 at 5:25 pm
சென்னை, மே 6 2025: தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 2026 இல் ஆட்சி அமைக்கப் போவதும் திமுக தான் என தெரிவித்துள்ளார்.
மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ” திமுகவின் ஆட்சி குறை சொல்ல முடியாத ஆட்சி. இதனால்தான் அவதூறு சேற்றை அள்ளி வீசுகிறார்கள். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்திட நாம் களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியை குறை சொல்ல முடியாது.
மு க ஸ்டாலின் கடிதம்
இதனால் ஈரைப் பேணாக்கி பேனை பேயாக காட்ட நினைக்கிறார்கள். திமுக அடிமை கட்சி அல்ல அது தன்மானமும் தைரியமும் கொண்ட இயக்கம்” என தெரிவித்துள்ளார்.
ஆறு முறை ஆட்சி வாய்ப்பு
தமிழ்நாட்டில், திமுகவுக்கு ஆறு முறை ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ள மு.க ஸ்டாலின், ” ஆறு முறை ஆட்சி செய்ய கிடைத்த வாய்ப்புகளில் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை திமுக உறுதி செய்துள்ளது. அந்த வகையில் நவீன தமிழ்நாட்டை கட்டமைத்தது திமுக அரசு. இந்த நிலையில் ஏழாவது முறையாக 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைக்கப் போவதும் உறுதி” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜயை விமர்சித்த திருமாவளவன்; ஏ.சி அரசியல்வாதி என்கிறார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com