MK Stalin: அரசியல் எதிரிகள் நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
MK Stalin: அரசியல் எதிரிகள் நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: March 5, 2026 at 5:56 pm
சென்னை, மார்ச் 5, 2026: அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். அவர்கள் நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள்; அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நம்முடைய பணியை மேற்கொண்டோம்” எனவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி
காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி நீண்ட இழுபறிக்கு பிறகு இறுதியானது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸூக்கு 28 சட்டமன்ற இடங்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்க கையெழுத்தாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸூம், அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வும் உள்ளன.
இதையும் படிங்க: காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com