MK Stalin: இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தும் பேரணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்பு அளித்துள்ளது.
MK Stalin: இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தும் பேரணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்பு அளித்துள்ளது.
Published on: May 9, 2025 at 3:55 pm
சென்னை, மே 9 2025: இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் முன்னெடுப்புக்கு மனித நேய மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெறும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.
இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் இப்பேரணியை அறிவித்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி. இப்பேரணிக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.
மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக இந்த பேரணியில் பங்கேற்பார்கள். நாட்டின் ஒற்றுமையையும் வலிமையும் பறைசாற்ற அனைவரும் கரம் கோர்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்ரீநகர் விடுதியில் மாணவர்கள்.. அமித் ஷாவுக்கு வைகோ கடிதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com