MH Jawahirullah: “தாடி வைத்திருந்த காரணத்தால் முஸ்லிம் மருத்துவ மாணவருக்கு மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு பயில இடமளிக்க மறுப்பு விட்டதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
MH Jawahirullah: “தாடி வைத்திருந்த காரணத்தால் முஸ்லிம் மருத்துவ மாணவருக்கு மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு பயில இடமளிக்க மறுப்பு விட்டதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: June 28, 2025 at 6:11 pm
சென்னை, ஜூன் 28 2025: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “நீட் சூப்பர் ஸ்பெஷாலிடி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஜூபைர் அஹமத் என்பவர் தனக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்லூரியான கோவையில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் சேர சென்ற போது அவர் வைத்துள்ள தாடியை அகற்றுமாறு மருத்துவமனை நிர்வாகம் நிர்பந்தித்ததாலும், தாடியை அகற்றவில்லை என்றால் மருத்துவ கல்விக்கான சேர்க்கை ரத்து செய்யப்படும் என மருத்துவமனை நிர்வாகத்தின் எச்சரிக்கையினாலும், மருத்துவர் ஜூபைர் அஹமத் அக்கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு பயில முடியாமல் வெளியேறியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “முஸ்லிம்கள் தாடி வைப்பது என்பது இஸ்லாமிய நம்பிக்கையின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். மேலும், இந்திய அரசமைப்பு சட்டப் பிரிவு 25, நாட்டு மக்கள் அனைவரும் தாம் விரும்பிய மதத்தை ஏற்றுக்கொண்டு அதனை பின்பற்றுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் அனுமதி அளித்துள்ள நிலையில், முஸ்லிம்களின் மதக்கோட்பாடுகளில் ஒன்றான தாடி வைப்பதை அனுமதி முடியாது என கோவை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் இதுபோன்ற செயலை கண்டித்து அதன்மீது நடவடிக்கை எடுப்பதுடன் மருத்துவர் ஜூபைர் அஹமதை அதே கல்லூரியில் பயில அனுமதி அளிக்க தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேபோல் தமிழ்நாடு அரசும் இவ்விஷயத்தில் தலையிட்டு முஸ்லிம் என்ற காரணத்தால் மத பாகுபாடோடு மருத்துவமனைகள் செயல்படக்கூடாது என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : போலி உர விற்பனையை தடுப்பது தி.மு.க.வின் கடமை; டி.டி.வி தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com