சாத்தான்குளம் படுகொலை.. போலீசார் 9 பேரும் குற்றவாளிகள்.. மார்ச் 30 தண்டனை.. முழு விவரம்!

Madurai High Court: சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிஸ் லாக்கப் படுகொலை வழக்கில் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

Published on: March 23, 2026 at 4:52 pm

Updated on: March 23, 2026 at 5:36 pm

மதுரை மார்ச் 23, 2026; மதுரை முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், சாத்தான்குளம் காவல் நிலையக் கொடுமை மரண வழக்கில் (ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்) தீர்ப்பை இன்று (மார்ச் 23, 2026) வழங்கியது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டையும் தேசத்தையும் அதிர்ச்சியடையச் செய்த இந்த சம்பவத்தில், மூத்த அதிகாரிகள் உட்பட பத்து போலீசார், கொடூரச் சம்பவத்தில் தங்களின் பங்கு காரணமாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிறுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ் உட்பட பத்து காவலர்கள் மீது புகார் பதியப்பட்டுள்ளது. இவர்கள் மீது, விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களை அடித்து கொடுமைப்படுத்தி உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதாக புகார்கள் உள்ளன.

மேலும் தவறான சிறைவைப்பு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் ஏற்பட்ட கொடுமை காரணமாக இருவரும் (ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்) உயிரிழந்துள்ளனர்.

இந்த வழக்கில் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது; இந்த தீர்ப்பில், போலீசார் தாக்கியதால்தான் ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது ஊர்ஜிதமாகிறது என்றார். தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார்.

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பை வாசித்தார்; அந்தத் தீர்ப்பில் குற்றத்தில் ஈடுபட்ட ஒன்பது போலீசாரும் குற்றவாளிகள் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பதிவு செய்துள்ளார்.

மேலும், வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க; நாராயண சாமிக்கு சீட் இல்லை.. ‘கை’ விரித்த காங்கிரஸ்?

ராகுல் காந்தி காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார்.. காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்!
M Christopher Tilak

ராகுல் காந்தி காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார்.. காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com