LPG cylinder: பெங்களூரு மற்றும் சென்னை ஹோட்டல்கள் தற்போது எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் கடும் பாதிப்பை சந்திக்க உள்ளன.
LPG cylinder: பெங்களூரு மற்றும் சென்னை ஹோட்டல்கள் தற்போது எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் கடும் பாதிப்பை சந்திக்க உள்ளன.

Published on: March 10, 2026 at 2:52 pm
சென்னை, மார்ச் 10, 2026: பெங்களூரு மற்றும் சென்னை ஹோட்டல்கள் தற்போது எல்.பி.ஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள உணவகங்களும் இதே பிரச்சினையால் கவலைப்படுகின்றன.
ஈரான்–அமெரிக்கா பதற்றம், ஹோர்முஸ் கடல்சந்தி பாதிப்பு காரணமாக, வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெங்களூரு, சென்னை ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால், வாடிக்கையாளர்களுக்கு உணவு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், LPG விலை ஏற்கனவே ₹60 வரை உயர்ந்துள்ளது, இது உணவக செலவுகளை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சில ஹோட்டல்கள் தற்காலிகமாக மின்சாரம் அல்லது இன்டக்ஷன் அடுப்பு பயன்படுத்தலாம் என்ற நிலைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீதித்துறை குறித்து சர்ச்சை.. நிபந்தனையற்ற மன்னிப்பு.. பாட புத்தகங்கள் வாபஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com